News May 13, 2024
5 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற RCB

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது. DCக்கு எதிரான நேற்றைய போட்டியில் RCB 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய RCB, இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
Similar News
News August 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 437 ▶குறள்: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ▶ பொருள்: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.
News August 24, 2025
SKவுடன் தோல்வி, சிம்புவுடன் ஹிட்: யார் இந்த நடிகை

தமிழில் ஒரு நடிகை 3 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று ஹிட். அந்த நடிகை யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை கல்யாணி பிரியதர்ஷன் தான். இவர் SKவுடன் ஹீரோ படத்தில் அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதனை தொடர்ந்து புத்தம் புது காலை, மாநாடு படங்களில் நடித்தார். இந்த இரண்டும் படங்களுமே ஹிட். தற்போது அவர் ரவியுடன் இணைந்து ‘ஜீனி’, கார்த்தியுடன் ‘மார்ஷல்’ படத்திலும் நடிக்கிறார்.
News August 24, 2025
DMK, TVK தான் போட்டி: பெங்களூர் புகழேந்தி

வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்க்கு என்ன தெரியும் என பலர் கேட்பதாகவும், கட்சி தொடங்கிய 7 மாதங்களில் NTR ஆட்சி அமைத்தார். ஆதலால் அரசியலில் எதுவும் நடக்கும் என கூறினார். EPS-யை முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது ஏன் அவர் இப்படி தடுமாறிவிட்டார் என தனக்கு தெரியவில்லை என்றார்.