News August 24, 2025
DMK, TVK தான் போட்டி: பெங்களூர் புகழேந்தி

வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்க்கு என்ன தெரியும் என பலர் கேட்பதாகவும், கட்சி தொடங்கிய 7 மாதங்களில் NTR ஆட்சி அமைத்தார். ஆதலால் அரசியலில் எதுவும் நடக்கும் என கூறினார். EPS-யை முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது ஏன் அவர் இப்படி தடுமாறிவிட்டார் என தனக்கு தெரியவில்லை என்றார்.
Similar News
News January 13, 2026
கிருஷ்ணகிரி: +2 போதும் மத்திய அரசில் வேலை!

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <
News January 13, 2026
இடியுடன் கூடிய மழை வெளுக்கும்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் இடியுடன் மழையும், அரியலூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட்

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


