News January 28, 2026

தாரமங்கலம்: வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

image

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார்-அருணா தம்பதியினரின் மூத்த மகள் ஹன்சிகா (4), தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளி வேனில் ஹன்சிகாவை அவரது தாய் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, ஹன்சிகாவின் தங்கை யாஷ்விகா (2) விளையாடிக்கொண்டே வேனுக்கு முன் சென்றுள்ளார். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியபோது, வேனின் சக்கரம் ஏறியதில் யாஷ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News February 4, 2026

மயிலாடுதுறை – சேலம் பயணிகள் கவனத்திற்கு

image

பராமரிப்புப் பணி காரணமாக, மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811) பிப். 6, 10, 13 தேதிகளில் வீரராக்கியம் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, சேலம் – மயிலாடுதுறை ரயில் (16812) அதே தேதிகளில் சேலம் – கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு, கரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்துத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

News February 4, 2026

சேலத்தில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News February 4, 2026

சேலம்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

image

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க<> இங்கே கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2026 ஆகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!