News January 17, 2026
UPI மூலம் PF பணத்தை எடுக்கலாம்!

ஏப்ரல் 1 முதல் EPF பணத்தை UPI மூலம் எடுக்க முடியும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு PF நேரடியாக மாற்றப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். UPI PIN-ஐ உள்ளிடுவதன் மூலம் சில நொடிகளில் பணத்தை எடுக்க முடியும் என்றும், இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கான சிக்கல்களை தீர்ப்பதில் EPFO கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News February 9, 2026
ரேஷன் கார்டுக்கு பணம்.. அரசு HAPPY NEWS

ரேஷன் கடைகளில் பொருள்களுக்கு பதிலாக பணம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இ-ரூபி என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட உள்ளதாம். இதன்மூலம் மாதம் ஒருமுறை பணத்துக்கான வவுச்சர் பயனாளியின் மொபைலுக்கு வரும். இதனை பணமாக மாற்றி வங்கியில் வைக்கலாம் (அ) பொருளாகவும் வாங்கலாம். இதுபற்றி உங்கள் கருத்து?
News February 9, 2026
அன்புமணி கையில் மாம்பழம் சின்னமா?

அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்தது தொடர்பாக டெல்லி HC-ல் <<19088643>>ECI<<>> விளக்கம் அளித்துள்ளது. கட்சி உரிமை கோரல் பிரச்னை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ECI தெரிவித்துள்ளது. இதனையடுத்து தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் ECI அங்கீகரிக்க எந்த தடையும் இல்லை என நீதிபதி தெரிவித்தார். இந்த உத்தரவு அன்புமணி தரப்புக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
News February 9, 2026
வானில் அதிசயம்… மிஸ் பண்ணிடாதீங்க!

வானில் அரிய நிகழ்வான கோள்களின் அணிவகுப்பை பார்த்துள்ளீர்களா? புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் சூரியன் மறைவிற்கு பிறகு வானில் தெரிவதை இன்றிலிருந்து பிப்.28 வரை தெளிவாக பார்க்கலாம். புதன், சனி மேற்கிலும், வியாழன் கிழக்கிலும் தெரியும். யுரேனஸ் வியாழனுக்கும் சனிக்கும் இடையிலும், நெப்டியூன் சனிக்கு அருகிலும் தெரிவதை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.


