News January 16, 2026
இனி தனித்தே போட்டி: மாயாவதி

2027 உ.பி., சட்டமன்ற தேர்தல் உள்பட இனிவரும் அனைத்து தேர்தல்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடிய அவர், கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, தங்கள் கட்சி வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு முழுமையாக சென்றன. ஆனால் மற்ற கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு வரவில்லை என்றவர், அதனால் BSP இனி தனித்தே களம் காணும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
விஜய் ஜெ.,வை சந்தித்ததில் என்ன தவறு? நாஞ்சில் சம்பத்

அழுத்தத்திற்கு அடிபணிகிறவன் நான் இல்லை என்று பேசிய விஜய்யை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று சாடிய அவர், படம் வெளிவருவதில் உள்ள இடையூறை போக்க அதிகாரத்தில் உள்ள முதல்வரை (ஜெ.,) சந்தித்து தீர்வு கேட்டால், அது பஞ்சமா, பாதகமா? என்று கேட்டுள்ளார்.
News January 28, 2026
’10-3-2-1-0′ தூங்கும் முறை தெரியுமா?

இரவில் நன்றாக தூங்க இந்த ’10-3-2-1-0′ முறை உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். படுக்கைக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காபி குடிப்பதையும், படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதையும், படுக்கைக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வேலை செய்வதையும் நிறுத்த வேண்டும். படுக்கைக்கு 1 மணி நேரத்திற்கு முன் போனை ஓரம் வைத்துவிட்டு, 0 – காலை அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் உறங்காமல் எழுந்திருங்கள்.
News January 28, 2026
கோவாவில் சிறுவர்களுக்கு SM-ஐ தடை செய்ய பரிசீலனை

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்க கோவா அரசு பரிசீலனை செய்து வருகிறது. SM பயன்பாட்டால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதாக உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் SM பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவாவிலும் சாத்தியம் இருந்தால் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் கூறியுள்ளார்.


