News May 5, 2024
தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் அனுமதி

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்து மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, மதிய உணவுக் கூட எடுத்துக்கொள்ளாமல், 1 மணியளவில் தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.
Similar News
News September 22, 2025
நயினார் நாகேந்திரன் – JP நட்டா சந்திப்பு

டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், JP நட்டாவை சந்தித்துள்ளார். அக்டோபரில் நயினார் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஆலோசனைகள், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெல்லி சென்ற EPS, அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதேநேரம், TTV தினகரன், OPS ஆகியோரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்.
News September 22, 2025
இரவு நன்றாக தூங்க உதவும் உணவுகள்

இரவில் உட்கொள்ளும் சில உணவுகள் நன்றாக தூங்க உதவும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவற்றை இரவு உணவில் அல்லது உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், உங்களுக்கு வேறு ஏதேனும் தூக்கத்திற்கு உதவு உணவு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
கொள்கை படையாய் திரண்ட மக்கள்: ஸ்டாலின்

மாநிலம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், அவ்வாறு கடந்த 2 நாள்களில் 72 திமுக மாவட்டங்களிலும் இந்த உறுதிமொழியை ஏற்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த உறுதிமொழியை ஏற்பதற்காக கொள்கை படையாய் திரண்ட மக்களுக்கும் நன்றி என்றும் ஸ்டாலின் X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.