News January 12, 2026
கட்டண கொள்ளைக்கு துணை போகும் திமுக: அன்புமணி

பொங்கல் திருநாளையொட்டி ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை திமுக அரசு தடுக்கத் தவறியதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆம்னி பஸ்கள் மதுரைக்கு ₹3,500, நெல்லைக்கு ₹4,200 வரை கட்டணம் வசூலிப்பதாகவும், ஆனால் இதனை தடுக்காமல், மக்களை சுரண்டுவதற்கு திமுக துணைபோவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக அரசுக்கு மனசாட்சி இருந்தால் ஆம்னி பேருந்து கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Similar News
News February 5, 2026
செல்லூர் கண்மாய்.. அதிமுக, திமுக போட்டிபோட்டு ஆய்வு

மதுரை, செல்லூர் கண்மாயை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்து தூர்வார வலியுறுத்தினார். இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி புதன்கிழமை மாலை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப்போட்டு ஆய்வு செய்வது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
News February 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 5, 2026
Warning: பச்சை வெங்காயத்தை சாப்பிடுகிறீர்களா?

வெங்காயம் ஆரோக்கியமானது என்றாலும், அதை பச்சையாக சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். வாயுத்தொல்லை, அலர்ஜி, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம், தலைவலி, செரிமான கோளாறு, வயிற்றுப் பிரச்னை உள்ளிட்டவை ஏற்படக்கூடும். வெங்காயத்தை முறையாக சுத்தம் செய்து சாப்பிடுவது சிறந்தது எனவும், குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.


