News May 4, 2024
விஐபி தரிசன சிபாரிசுகள் ஏற்கப்படாது

கோடை காலம் முழுவதும் விஐபி தரிசன சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி, கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
Similar News
News November 17, 2025
PTR-ஐ எதிர்த்து போட்டியிடுகிறாரா பிரேமலதா?

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் தேதிமுக சஸ்பென்ஸாக வைத்து இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சர் PTR-ன் மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று மதுரை தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர்; இதனால், அங்கு பிரேமலதா களமிறங்கினால் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 17, 2025
சியா விதைகளை இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

சியா விதைகளை ஊற வைக்காமல் அப்படியே வாயில் போட்டுவிட்டு, பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது. இப்படி செய்வதால், அந்த விதைகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். பிறகு குடல்களில் அடைப்பை ஏற்படுத்தி பல வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சியா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரமாவது ஊறவைத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News November 17, 2025
BREAKING: கனமழை.. முதல் மாவட்டமாக விடுமுறை

நள்ளிரவில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாகைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


