News May 4, 2024

நாதக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

image

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற இருந்த நாதக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி மறுத்த போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் பலர் தடுப்பு காவலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்று தேதியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

9 ஆண்டுகள் பின் மோடியின் இஸ்ரேல் பயணம்

image

வரும் பிப். 25 – 26-ம் தேதி வரை PM மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் அமையும் இந்த பயணத்தில், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முக்கியமாக இந்தியா இஸ்ரேல் இடையே நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் இதில் இறுதி செய்யப்பட உள்ளன. கடைசியாக 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு PM மோடி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 17, 2026

டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க இதை செய்யுங்க!

image

* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். 7-8 மணி நேரம் தூங்குங்கள். *மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். *கோழி, மீன், பாதாம், முந்திரி, சியா விதைகள், பூசணி விதைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். *புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும். இவற்றின் மூலம், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

News February 17, 2026

புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.

error: Content is protected !!