News January 8, 2026
ஷாக் கொடுத்ததா ICC? வங்கதேசம் மறுப்பு

T20 WC தொடரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் போட்டிகளை மாற்ற கோரி வங்கதேசம் ICC-க்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதை <<18785386>>ICC<<>> நிராகரித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அந்த செய்திகளில் உண்மையில்லை என வங்கதேசம் மறுத்துள்ளது. மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக ICC உடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News February 13, 2026
தவெக போல் தனித்து போட்டியிட தயாரா? ஆதவ்

‘மக்களுடனே கூட்டணி’ என தவெக தனித்து போட்டியிடும் என்பதை விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், கிருஷ்ணசாமி, சசிகலா ஆகியோர் தவெகவுடன் கூட்டணியில் சேரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தங்களைப் போல் திமுக, அதிமுக தனித்து போட்டியிட தயாரா என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் தவெக தனித்து தான் போட்டியிடப் போகிறது என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
News February 13, 2026
இதற்கு பணம் எங்கிருந்து வந்தது?

ஊதிய உயர்வு, சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சத்துணவு & தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலதரப்பினரும் போராடி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு சொல்லும் பதில் நிதி இல்லை என்பதே. இந்நிலையில், 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000, கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 சேர்த்து<<19126380>> ₹5,000-ஐ வழங்கியுள்ளது<<>> தமிழக அரசு. கடும் நிதி நெருக்கடியில் தேர்தலை முன்வைத்து அரசு இதை வழங்குகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.
News February 13, 2026
தேர்வு கிடையாது: 10-வது போதும்.. 607 காலியிடங்கள்

மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 607 Trade Apprentices பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *ITI முடித்திருக்க வேண்டும் *18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் *இதற்கு தேர்வுகள் கிடையாது *மாதம் ₹11,040 சம்பளமாக வழங்கப்படும் *வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


