News May 2, 2024
4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட ரோஹித் விருப்பம்

டி20 உலகக் கோப்பையில் 4 சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியுடன் விளையாட விரும்புவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். அணித் தேர்வு குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தேர்வு குழுத் தலைவர் அகர்கருடன் சேர்ந்து விளக்கம் அளித்த ரோஹித், 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்புவதற்கான காரணத்தை தற்போது தெரிவிக்க இயலாது, அமெரிக்காவில் தெரியப்படுத்துவேன் என்றார்.
Similar News
News March 14, 2026
அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம்!

கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற மார்ச்.30ஆம் தேதி வரை கும்பகோணம் தலைமை நிலையம், மேலக்காவேரி தலைமை நிலையம், கும்பகோணம் கோட்டத்தில் சுவாமிமலை, ஆடுதுறை, நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம், பந்தநல்லூர் ஆகிய துணை தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 14, 2026
பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குக

போர் பதற்றத்துக்கிடையே பலரும் கேன், டின்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து, இவ்வாறு பாதுகாப்பின்றி எரிபொருள் வழங்கக்கூடாது என இந்திய ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால் இதை வாடிக்கையாளர்களிடம் கூறினால், அவர்கள் ஊழியர்களை மிரட்டுவதாக பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, TN-ல் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி DGP-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.


