News May 2, 2024

கிருஷ்ணகிரி: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

image

பர்கூர் போலீசார் மேல் வெங்கடாபுரம் பகுதியில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பர்கூர் மகேந்திரன் (51), துரைஸ் நகர் சுரேஷ்குமார் (41). குண்டியால்நத்தம் ரமேஷ் (37), எண்டுசெட்டி தெரு சந்திரசேகரன் (45), சிவக்குமார் (47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News October 16, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News October 16, 2025

கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு இடமா!

image

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அருகே மல்லச்சந்திரம் மோரல்பாறையின் மீது கற்திட்டைகள் உள்ளன. இவை இறந்தவர்களின் நினைவாக சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். இவை 1மீ முதல் 2.6மீ வரை உயரம் கொண்டதாக உள்ளது. இவற்றில் சில ஓவிங்களும் காணப்படுகின்றன. நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!