News December 29, 2025

சேலம்: அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி!

image

சேலம்: ஓமலூர் தொகுதியில் மூன்று முறை (1989, 1991, 2011) எம்.எல்.ஏ-வாக இருந்த பல்பாக்கி சி.கிருஷ்ணன், தவெக நிர்வாகி செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.இதனைத் தொடர்ந்து, கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, பல்பாக்கி கிருஷ்ணனை அதிமுகவிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News January 28, 2026

சேலம் அருகே பெண் மீது தாக்குதல்

image

சேலம், சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், தன்னை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்கிய நபர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News January 28, 2026

JOB ALERT சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 28, 2026

தாரமங்கலம்: வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

image

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார்-அருணா தம்பதியினரின் மூத்த மகள் ஹன்சிகா (4), தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளி வேனில் ஹன்சிகாவை அவரது தாய் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, ஹன்சிகாவின் தங்கை யாஷ்விகா (2) விளையாடிக்கொண்டே வேனுக்கு முன் சென்றுள்ளார். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியபோது, வேனின் சக்கரம் ஏறியதில் யாஷ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!