News May 2, 2024
தட்சிணாமூர்த்தியும் குருபகவானும் ஒருவரல்ல!

ஆன்மீக அன்பர்கள் பலரும் தட்சிணாமூர்த்தியும் குருபகவானும் ஒருவர்தான் என நினைத்துக் கொண்டு வழிபடுகின்றனர். உண்மையில், இருவரும் ஒருவரல்ல. தட்சிணாமூர்த்தி சிவவடிவானவர்; சிவகுரு. குருவோ கிரக வடிவானவர்; தேவகுரு. தோன்றுதல் மறைதல் இல்லாத தட்சிணாமூர்த்தியும் உதயம் அஸ்தமனம் கொண்ட குருவும் ஒன்றல்ல என சாஸ்திரம் கூறுகிறது. எனவே, குருவுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தட்சிணாமூர்த்திக்கு செய்யாதீர்கள்.
Similar News
News August 29, 2025
விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. PHOTO ❤️

விஷால்- சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் விஷாலின் வீட்டில், இரு வீட்டார் & நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள நிச்சயம் நடந்தது. தன் பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு X-ல் நன்றி சொன்ன விஷால், திருமண நிச்சயதார்த்த போட்டோவையும் அத்துடன் பகிர்ந்துள்ளார். வாழ்த்துகள் விஷால்- சாய் தன்ஷிகா!
News August 29, 2025
மூத்த தலைவர் கவலைக்கிடம்.. விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த செய்தியை கேட்டவுடன் ஹாஸ்பிடலுக்கு நேரில் விரைந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
News August 29, 2025
ஸ்டாலின் எப்போது ஐயப்ப பக்தரானார்: BJP கேள்வி

கேரளாவில் நடைபெறவுள்ள ஐயப்ப பக்தர்கள் சங்கமத்தில் கலந்துகொள்ள <<17509023>>CM ஸ்டாலினுக்கு<<>> அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பர் என கூறப்பட்டது. இந்நிலையில், ஸ்டாலின் எப்போது ஐயப்ப பக்தரானார்? என கேரள BJP தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார். பேரவைத் தேர்தல் நெருங்குவதால், இது அரசியல் நாடகம் மட்டுமே என்றும் சாடியுள்ளார்.