News December 29, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 5, 2026
திருவாரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 5, 2026
திருவாரூர்: காா் மோதி பெண் பலி-ஒருவர் கைது

பரவாக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி கயல்விழி. இவர், நேற்று அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரவாக்கோட்டை போலீசார் பீட்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 5, 2026
திருவாரூர் அருகே அரசு பேருந்து விபத்து

சென்னை கொரட்டூர் சேர்ந்தவர் சிவராமன். இவர் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் கும்பகோணம் நன்னிலம் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது முன் சக்கரம் வெடித்தில் முன்னாள் சென்ற பேருந்து மீது கார் மோதியதில் இதில் பேருந்தில் பின் பக்க சக்கரமும் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதுமில்லை.


