News May 2, 2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கார் விபத்தில் பலி

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த முருகன், காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது, கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும் மோதியது. இதில், முருகன், மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மகள் நித்திஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 16, 2026
நீலகிரி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 16, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


