News May 1, 2024

குரூப்-1 தேர்வில் வென்ற பீடித்தொழிலாளி மகள்

image

தென்காசியைச் சேர்ந்த பீடிச்சுற்றும் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அரசில் காலியாக உள்ள குரூப் 1 அளவிலான 95 பணி இடங்களில் அவர், துணை ஆட்சியர், டி.எஸ்.பி., பதவிகளில் ஏதேனும் ஒன்றில் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது விடாமுயற்சியால் 3ஆவது முறையாக தேர்வெழுதி வென்ற இவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 26, 2025

மலக்குழிகளில் வேலையில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!

image

சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் எந்தவொரு நபரும், மலக்குழிகளில் இறங்கி வேலை செய்யக்கூடாது என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறான பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.

News August 26, 2025

BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹74,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ₹1 குறைந்து ₹130-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,30,000-க்கும் விற்கப்படுகிறது.

News August 26, 2025

இந்தியா மீதான 50% வரி..இடியை இறக்கிய USA

image

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வருவதாக USA அறிவித்துள்ளது. இது வந்தால் ஜவுளி ஏற்றுமதி, ரத்தினங்கள் ஏற்றுமதி, மருந்து பொருள்களை தயாரிப்பு, செல்போன் உற்பத்தி உள்ளிட்ட துறையை இது பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. வரி உயர்வு குறித்து USA உடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்து, கடைசி நேரத்தில் அது ரத்தானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!