News May 1, 2024
ஏற்காடு செல்ல கட்டுப்பாடு: மாவட்ட காவல்துறை

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
BREAKING: சேலம் வந்தார் விஜய்

சேலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சேலம் வந்தடைந்தார். அவருக்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், விஜய் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News February 13, 2026
சேலத்தில் அறிவிப்பாரா விஜய்?

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணி குறித்து பேசி அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்கின்றனர். இந்நிலையில் இன்று சேலத்தில் உரையாற்றும் விஜய் மற்ற கட்சிகளை போல ஆயிரங்களை அறிவிப்பாரா (அ) பிரத்தியேகமாக மாநிலத்தின் வளர்ச்சி குறித்த திட்டங்களை பற்றி அறிவிப்பாரா? என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 13, 2026
சேலம் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறதா?

சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று (பிப்.13) தவெக கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் தவெகவின் பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. எனவே இதில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளின் தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுமா? அதில் மாவட்ட செயலாளர்களே இடம் பெறுவார்களா? என விஜய்யின் உரையை தவெக தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.


