News December 16, 2025
குமரி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேம்பனூரை சேர்ந்தவர் ஜெயசேகரன்(50). செட்டிக்குளம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்த இவர் அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை.
Similar News
News January 7, 2026
பள்ளி வாகனம் மீது டெம்போ மோதி விபத்து

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பகுதியில் நேற்று மாலை பள்ளி வாகனமும் டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 6, 2026
குமரி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

குமரி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News January 6, 2026
குமரி: தி.மு.க. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேர் திருவிழாவில் பக்தர்களை அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் இன்று (ஜன.6) புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அவர்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்.


