News December 5, 2025
விஜய் கட்சியில் இன்னொரு அதிமுக தலைவர் இணைந்தார்

2026 தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், மாற்று கட்சியினரை இணைக்கும் முயற்சியில் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து தவெகவும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், குமரி அதிமுக Ex MLA முத்துகிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். MGR காலகட்டத்தில், 1980-ல் குமரி அதிமுக MLA-வாக இருந்துள்ளார். ஏற்கெனவே MGR உடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
விழுப்புரம்: தினமும் கையெழுத்து.. கார் ஓட்டுநர் தற்கொலை!

விழுப்புரம்: சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர், சரவணன் 6 மாதங்களுக்கு முன்பு காரில் திருவண்ணாமலைக்கு சவாரி வந்துள்ளார். அப்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்தார். ஆனால் தினமும் செஞ்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் நேற்று முன்தினம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


