News April 26, 2024
கோலி இல்லாத டி20 அணியை அறிவித்த சஞ்சய் மஞ்ச்ரேகர்

சஞ்சய் மஞ்ச்ரேகர் தேர்வு செய்துள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கோலிக்கு இடம் இல்லை. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார், ரிஷப் பந்த், கே.எல் ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, சிராஜ், அவேஷ் கான், ராணா, மயங்க் யாதவ், குருணால் பாண்டியா அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளாக கோலி டி20 இந்திய அணியில் விளையாடாததால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 607▶குறள்: மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். ▶பொருள்: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.
News February 13, 2026
இஸ்லாமியர்களை புறந்தள்ளும் திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கி வரும் முஸ்லீம் கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என தமிழ் மாநில காங்., கட்சியின் பொதுச் செயலாளர் முனாவர் பாஷா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதான இஸ்லாமிய கட்சிகள் ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் திராவிட கட்சிகளிடம் நிற்காமல், ஒரு குடையின் கீழ் இணைந்தால் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்.
News February 13, 2026
உப்பு குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்!

குழந்தைகளின் உணவில் கூடுதலாக உப்பு சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து சோடியத்தையும் கொண்டுள்ளது. அதனால் உப்பு சேர்க்க தேவையில்லை. ஒரு வயத்துக்குட்பட்ட குழந்தைகளின் சிறுநீரகங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், உப்பை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், 5 வயது வரை உப்பு கட்டாயம் இல்லை.


