News November 22, 2025
கலவை ஒழுங்கு முறை கூடத்தில் நெல் விற்பனை

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திமிரி ஒன்றியம் கலவை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிலத்தில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை விற்பனை செய்து வருவது வழக்கம். இந்நிலையில், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று (நவ.21) ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் மீனம்பூர் நெல் ரகம் அதிகபட்ச விலையாக ரூ.3081க்கு விற்பனையானது.
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளி நியமன பதவி ஏற்பு

தமிழக அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (நவ.27)இராணிப்பேட்டை நகராட்சியில்
மாற்றுத்திறனாளி
இஸ்மாயில் என்பவருக்கு நியமன உறுப்பினர் பதவியேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சந்தன மாலை சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன் ராணிப்பேட்டை நகர திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News November 27, 2025
சோளிங்கர்: நரசிம்ம தீர்த்தம் சீரமைக்கும் பணி தொடக்கம்

இன்று (நவ.27) ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிவாரத்தில் உள்ள நரசிம்ம தீர்த்த குளத்தினை பொதுமக்கள் அளித்த ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சீர் அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
News November 27, 2025
ராணிப்பேட்டை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராணிப்பேட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


