News April 25, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ்( 19). இவர் இன்று பைக்கில் தக்கோலம் கூட்ரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்திஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டையில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் 15 தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாம் பற்றி மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜே.யூ சந்திரகலா தெரிவித்தார்.
News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <
News April 19, 2025
ராணிப்பேட்டையில் இடி, மின்னலுடன் மழை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதால் அவசர தேவைகள் இல்லாமல் வெளியே செல்லாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.