News April 21, 2024

IPL: ஆட்டநாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட்

image

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six விளாசி 89(32) ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் முதல் 6 ஓவர்களிலேயே (பவர் பிளே) 125 ரன்களை குவித்தது ஐதராபாத் அணி. நடப்பு ஐபிஎல் தொடரில் 62, 19, 31, 21, 102, 89 ரன்கள் குவித்துள்ள அவர், அதிக ரன் குவித்தவர்களுக்கான வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார்.

Similar News

News February 9, 2026

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்!

image

முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. ஜி20 நாடுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் என்று தெரிவித்துள்ளது. அதிகரித்த முதலீடுகள், நிலையான பொருளாதார வளர்ச்சி, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் வருமான வரிச் சலுகைகள் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

News February 9, 2026

‘நான் சாகப் போகிறேன்’

image

‘பெற்றோர் பேச்சை கேட்காமல் தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்யும் பெண்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். விடைபெறுகிறேன்’. ஆந்திராவில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பத்மாவின்(28) கடைசி வரிகள் இவை. கணவன் வேலைக்குச் செல்லாமல் ஊரை சுற்றி கடன் வாங்கியதால், அப்பெண் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. உணருங்கள்!

News February 9, 2026

அரசுப் பள்ளியில் மாணவி மரணம்

image

நாமக்கல்லில் அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ரக்‌ஷிதா என்ற மாணவி, ஆண்டு விழாவிற்காக நடன பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். அப்போது எமனாக வந்த விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதில் வலியில் துடிதுடித்துப்போன மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!