News April 21, 2024
IPL: தமிழக வீரர் நடராஜன் அபார பந்துவீச்சு

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் வீரர் நடராஜன் அதிரடி காட்டியுள்ளார். நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர், 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் டெல்லி அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியை தழுவியது. இந்த சிறப்பான பந்துவீச்சில் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில், 10 விக்கெட்டுகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளார்.
Similar News
News August 19, 2025
இன்று 186-வது உலக புகைப்பட தினம்

வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். அப்படி பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. அப்பேர்பட்ட புகைப்படங்களின் உன்னதத்தையும், புகைப்படக் கலைஞர்களின் திறனை பெருமைப்படுத்தும் விதமாகவும் 1839-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆக.19-ம் தேதி ‘உலக புகைப்பட தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 186-வது புகைப்பட தினம். Share it!
News August 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 19 – ஆவணி 3 ▶ கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: ஏகாதசி ▶ சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News August 19, 2025
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேலுடன் 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 60 நாட்கள் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறாமல் இருந்தால், 10 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் அடுத்தக்கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் இந்த தற்காலிக போர்நிறுத்தம் குறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.