News April 19, 2024
வாக்களிக்க உடனே புறப்படுங்க

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 30 நிமிடங்களில் வாக்குப் பதிவுக்கான நேரம் நிறைவடைய உள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் வாக்குப் பதிவு மந்த நிலையிலேயே இருந்து வந்தது. வெயில் காரணமாக சிலர் வாக்களிக்க வராத நிலையில், தற்போது வெயில் குறையத் தொடங்கியுள்ளதால் மக்கள் அனைவரையும் தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
Similar News
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.
News January 20, 2026
இரவில் தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளையும் அவர்கள் சிறைபிடித்துள்ளனர். கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல போராட்டங்களை நடத்தியும் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை என்பதே மீனவர்களின் வேதனைக் குரலாக உள்ளது.
News January 20, 2026
தைராய்டு இருக்கா… இதெல்லாம் சாப்பிடாதீங்க!

தைராய்டு இருந்தால், அயோடின் அதிகம் உள்ள கடல் உணவுகள், பால், மீன் ஆகியவற்றை உண்பதை தவிருங்கள். அதிக அயோடின் ஹைப்பர் தைராய்டிசத்தை தீவிரமாக்கும். காய்கறிகளில் குறிப்பாக முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் ஆகியவையும், பதப்படுத்தப்பட்ட, பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் காபி, சாக்லேட் மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது தைராய்டு நோயாளிகளுக்கு நல்லது.


