News April 19, 2024
வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடுகள் (1)

துருக்கியில் 1986 முதல் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி வாக்களிக்கவில்லையெனில், 8 யூரோ அபராதம் விதிக்கப்படும். பொலிவியாவில் முதல்முறை வாக்களிக்கவில்லையெனில் அபராதமும், தொடர்ந்து தவிர்த்தால் வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் முதலில் வாக்களிக்கவில்லை என்றால் 20 டாலர் அபராதம், தொடர்ந்து தவிர்த்தால் சிறை தண்டனை விதிக்கப்படும்
Similar News
News May 7, 2025
நான் ஒரு Accidental Actor.. மனம் திறந்த அஜித்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தான் ஒரு Accidental Actor என மனம் திறந்து பேசியுள்ளார். ரேஸ் மீதான ஆர்வத்தை தொடர மாடலிங் வருமானத்தை பயன்படுத்தியதாகவும், நடிப்பு பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் படங்களில் நடிக்க முடிவு செய்தபோது குடும்பத்தினர் கவலைப்பட்டதாக தெரிவித்த அஜித், ஆனாலும் ஒரு நடிகனாக தன்னை நிரூபித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
News May 7, 2025
எப்படி இருக்கிறது ரெட்ரோ..?

‘ரெட்ரோ’ படத்தின் முதல் காட்சிகளை வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் பயங்கர ஸ்டைலாக இருப்பதாகவும், சூர்யா அசத்தலாக நடித்திருப்பதாகவும் சிலாகித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தை பாராட்டி, படம் நிச்சயம் ஒரு ‘Cult Classic’ தான் என குறிப்பிடுகின்றனர். மேலும், பூஜா ஹெக்டேவின் நடிப்பையும் வெகுவாக பாராட்டுகின்றனர். நீங்க எப்போ படம் பாக்க போறீங்க?
News May 7, 2025
சென்னை ஐகோர்ட் இன்று முதல் ஜூன் 1 வரை விடுமுறை!

இன்று (மே 1) முதல் MHC-க்கு கோடை விடுமுறையாகும். மே 7, 8 தேதிகளில் நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோரும், மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோரும் அவசர கால வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அதேபோல், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 தேதிகளில் விசாரிப்பார்கள்.