News May 7, 2025

நான் ஒரு Accidental Actor.. மனம் திறந்த அஜித்!

image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தான் ஒரு Accidental Actor என மனம் திறந்து பேசியுள்ளார். ரேஸ் மீதான ஆர்வத்தை தொடர மாடலிங் வருமானத்தை பயன்படுத்தியதாகவும், நடிப்பு பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் படங்களில் நடிக்க முடிவு செய்தபோது குடும்பத்தினர் கவலைப்பட்டதாக தெரிவித்த அஜித், ஆனாலும் ஒரு நடிகனாக தன்னை நிரூபித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 17, 2025

அலர்ட்: புயல் வரப்போகும் தேதி இதுதான்

image

நவ.22-ல் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து, நவ.25-ல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடலோர & டெல்டா மாவட்டங்களில் நவ.21, 22 ஆகிய நாள்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.

News November 17, 2025

முதல் ஆஸ்கார் விருதை பெற்றார் டாம் க்ரூஸ்

image

ஹாலிவுட்டின் நடிப்பு அரக்கன் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆஸ்கர் குறிப்பிட்ட படத்தில் அவர் நடித்ததற்காக வழங்கப்படவில்லை என்பதே இதில் ஹைலைட். மாறாக, திரைப்பட துறையில் அவர் படைத்த சாதனை, அவர் ஆற்றிய சேவை ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விருதை அவர் எமோஷனலாக பெற்றுக்கொண்டார்.

News November 17, 2025

இன்னும் 3 நாள்களில் புதிய கட்சி: மல்லை சத்யா

image

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவ.20-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கும் தலைவராக வைகோ இருந்தார் என்றும் சாடினார். மேலும், 2016 தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் உள்ளதாக கூறிய அவர், அதை தற்போது சொல்ல முடியாது என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

error: Content is protected !!