News April 19, 2024
ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி பலி

கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி பிரான்சிஸ் ஒகோல்லா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை உறுதி செய்த கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, அந்நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக தெரிவித்தார்.
Similar News
News January 21, 2026
14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள்

நேற்று சட்டபேரவையில் ஆளுநர் ரவி உரையில், தமிழ்நாட்டில் மேலும் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, ஓசூர், காரைக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை கரூர், ஊட்டி, நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகியவை. ஏற்கெனவே 7 மாவட்டங்களில் டைடல் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.
News January 21, 2026
சாப்பிடும்போது பேசுகிறீர்களா? இது உங்களுக்குதான்!

சாப்பிடும்போது பேசுவது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வாய் வழியாக வயிற்றில் அதிகப்படியான காற்று நுழைவது ஏப்பம் மற்றும் வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். உணவு, உணவுக்குழாயில் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று கடுமையான இருமலை ஏற்படலாம். சரியாக மெல்லாததால், செரிமான சாறுகள் உணவில் கலக்காமல், அமிலத்தன்மை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
News January 21, 2026
TCL உடன் கைகோர்த்த சோனி

சோனி தனது டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவை மேம்படுத்த சீன நிறுவனம் TCl உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதில் TCL 51% பங்கையும், சோனி 49% பங்கையும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் முயற்சியின் மூலம் Sony Bravia டிவி தயாரிப்பு, விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளை உலகமெங்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


