News April 19, 2024

ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி பலி

image

கென்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி பிரான்சிஸ் ஒகோல்லா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். எல்ஜியோ மாராக்வட் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை உறுதி செய்த கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ, அந்நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக தெரிவித்தார்.

Similar News

News November 19, 2025

மகளிர் வங்கி கணக்குகளில் ₹15,000: சீமான்

image

தேர்தலுக்கு முன் பெண்களின் வங்கிகணக்கில் திமுக அரசு பணம் செலுத்தலாம் என சீமான் தெரிவித்துள்ளார். பிஹாரில் NDA வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் பெண்களின் வங்கிக்கணக்கில் ₹10,000 செலுத்தியதுதான். அந்த ஃபார்முலாவை கையில் எடுத்து திமுகவும், மகளிர் வங்கிக் கணக்கில் ₹15,000 செலுத்த வாய்ப்புள்ளது. எனவே, இப்போதே தாய்மார்களை வங்கிகளில் புதிய கணக்கை ஆரம்பிக்க சொல்ல வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

News November 19, 2025

SIR பணிகளை முடக்க திமுக சதி: பாஜக

image

SIR-ஐ எதிர்த்து வருவாய் துறை சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளில் அரசு ஊழியர்கள் ஒத்துழைக்கவில்லை எனில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல், SIR பணிகள் தடைபட வேண்டும் என நினைப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் சாடியுள்ளார்.

News November 19, 2025

BREAKING: சென்னையில் 10 இடங்களில் ED ரெய்டு

image

சென்னையில் சவுகார்பேட்டை, கோடம்பாக்கம், அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!