News April 18, 2024
தயார் நிலையில் இருக்க உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தயாராக இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், தற்போது வெயில் சுட்டெரிப்பதால் அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி அளிக்கும் வகையில் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
PMK-வினர் மனங்களை எக்ஸ்ரே எடுத்து கூட்டணி: ராமதாஸ்

CM ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். 2026 தேர்தலில் இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமையும் என்றார். மேலும், பாமகவினரின் மனங்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்து அனைவரது மனங்களும் குளிரும் வகையில் கூட்டணி முடிவை எடுப்பேன் என உறுதியளித்தார். குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
News August 17, 2025
ED ரெய்டுக்கு காரணம் நெல்லை விருந்தா?

அமைச்சர் ஐ.பி., உள்பட மேலும் சில அமைச்சர்கள் ED பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டுக்கு பின்னணியில் நெல்லை விருந்து தான் காரணம் என்கின்றனர். சமீபத்தில் தனது நெல்லை வீட்டில் EPS, ADMK தலைகளுக்கு நயினார் விருந்தளித்தார். அப்போது, தேர்தல் பணிகளை முடக்க திமுக அமைச்சர்களின் பண பலத்தில் கை வைக்கவேண்டும், அதற்கு ரெய்டு தான் ஒரே வழி என இருவரும் டிஸ்கஸ் செய்ததாக கூறப்படுகிறது.
News August 17, 2025
காதலிக்காக மனைவியை துடிதுடிக்க கொன்ற BJP தலைவர்!

காதலியுடன் பழக மனைவி இடையூறாக இருந்ததால், BJP தலைவர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீரில் ரோஹித் சைனி (28), சஞ்சுவை(25) கொலை செய்து, அதனை கொள்ளை சம்பவம் போல செட்டப் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ரோஹித்தின் காதலி ரிது சைனியின் (25) வற்புறுத்தலின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரோஹித் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.