News April 18, 2024
தயார் நிலையில் இருக்க உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தயாராக இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், தற்போது வெயில் சுட்டெரிப்பதால் அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி அளிக்கும் வகையில் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
குற்றவாளிகள் நரகத்திலும் தப்ப முடியாது: அமித்ஷா

மோடியின் அரசு பயங்கரவாதத்தை வேர்களிலிருந்து ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வார்கள் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நரகத்தில் இருந்தாலும் விடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹரியானாவின் பரீதாபாத்தில் நடத்த நிகழ்ச்சியில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.

ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.