News April 18, 2024
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினார்

ஈரான் ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் மாலுமி இந்தியா திரும்பினார். ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டுள்ளது. மீதமுள்ள 16 இந்திய மாலுமிகள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு வாடகை வீட்டுக்கு போறீங்களா?

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
தவெக உடன் விசிக, காங்., பேச்சுவார்த்தை: நயினார்

திமுக கூட்டணி பலமாக இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூரில் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், விசிகவும் தற்போது தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த கூட்டணி எப்படி இருந்தாலும் சரி, வரும் தேர்தலில் NDA கூட்டணி நிச்சயமாக வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
News December 8, 2025
BREAKING: முக்கிய அரசியல் தலைவரை சந்திக்கிறார் விஜய்

நாளை புதுச்சேரிக்கு செல்லும் வழியில், பாமக நிறுவனர் ராமதாஸை விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுமா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவரும் சந்தித்தால் அரசியலில் இதுதான் நாளை ஹாட் டாபிக். முன்னதாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றபோது, விஜய் சந்திக்கவில்லை என்பதை நாசுக்காக ராமதாஸ் கூறியிருந்தார்.


