News April 18, 2024

ஈரானில் இருந்து இந்தியா திரும்பினார்

image

ஈரான் ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் மாலுமி இந்தியா திரும்பினார். ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டுள்ளது. மீதமுள்ள 16 இந்திய மாலுமிகள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Similar News

News November 10, 2025

அதிக லைக்ஸ் பெற்ற இன்ஸ்டா பதிவுகள் இவைதான்!

image

இன்றைய உலகம் இன்ஸ்டாகிராமில் தான் வசித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான போஸ்ட்களை பார்க்கிறோம். ஆனால், உலக மக்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்து, அதிக Likes பெற்ற போஸ்ட் எது என்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த போட்டோ, அதிக Likes-ஐ பெற்றுள்ளது என பாருங்கள். இதில், நீங்க எந்த போஸ்டுக்கெல்லாம் Like போட்டிருக்கீங்க?

News November 10, 2025

EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை: உதயநிதி

image

திமுக அறிவுத் திருவிழாவை நடத்தியுள்ளது, அதிமுக அடிமைத் திருவிழா நடத்தலாம் என DCM உதயநிதி விமர்சித்துள்ளார். EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை என சாடிய அவர், அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு பாசிச பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவ பார்க்கிறது என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, CM ஸ்டாலின் மீண்டும் CM ஆக பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.

News November 10, 2025

‘அரசன்’ படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

image

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ப்ரோமோவின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து படத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இச்சூழலில்தான், ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன், படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்கும் என கூறியிருக்கிறார்.

error: Content is protected !!