News October 27, 2025
FLASH: உருவானது மொன்தா புயல்

வங்கக்கடலில் ‘மொன்தா’ புயல் உருவானதாக IMD தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 600 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள இப்புயல், அடுத்த 48 மணி நேரத்தில் கடும் புயலாக வலுப்பெறும். இதனையடுத்து, நாளை மாலை (அ) இரவு நேரங்களில் காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News October 27, 2025
FLASH: ஷ்ரேயஸுக்கு ICU-வில் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷ்ரேயஸ் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற IND Vs AUS இடையேயான கடைசி ஒருநாள் போட்டியின்போது, ஆஸி., வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, ஷ்ரேயஸ் நீண்ட தூரம் பின்னோக்கி ஓடி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த முயற்சியில் அவரது இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டு உட்புற ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News October 27, 2025
USA-வின் 100% வரியில் இருந்து தப்பியதா சீனா?

சீனா மீதான USA-ன் 100% வரி நவ.1-ல் அமலுக்கு வரவிருந்தது. இதுதொடர்பாக இரு நாடுகளும் 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தின. அதில், முன்னேற்றமும் காணப்பட்டதால் வரியை உயர்த்தும் முடிவில் இருந்து USA பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அக்.30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்கவுள்ளார். அன்றைய தினம் இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 27, 2025
ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் புஸ்ஸி ஆனந்த்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்தின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. SC-யின் தீர்ப்பின்படி, கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்மனுதாரராக கரூர் போலீஸ் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்


