News October 27, 2025
மீண்டும் இணைகிறதா பாஸ் கூட்டணி?

‘நீயெல்லாம் நல்லா வரணும்டா’ என்று நட்புக்கான கலக்கல் காம்போவாக சினிமாவில் ஜொலித்தவர்களில் ஆர்யா – சந்தானமும் உண்டு. பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சேட்டை என இந்த கூட்டணிக்கென்று தனி ரசிகர்களே உள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கதைகளை இருவருமே கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ஜாய் தான்!
Similar News
News October 27, 2025
சர்வதேச சந்தையில் மீண்டும் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) $48(₹4,216) சரிந்து $4,047-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.34 சரிந்து $48-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த வார தொடக்கத்தில் மளமளவென சரிந்து, வார இறுதியில் ஏற்றம் கண்ட தங்கம், தற்போது மீண்டும் குறைந்து வருவதால் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News October 27, 2025
மருத்துவ துணை படிப்புகள்: அவகாசம் நீட்டிப்பு

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவ.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபி, நர்சிங், பாரா மெடிக்கல், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் இன்னும் 2,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இங்கே <
News October 27, 2025
EPS 4 ஆண்டுகளாக காணாமல் போனார்: கனிமொழி

4 ஆண்டுகளாக காணாமல் போன EPS, இன்று CM ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்கிறார் என கனிமொழி சாடியுள்ளார். ஒளிந்து கொண்டிருந்த EPS-ஐ, பாஜக கண்டறிந்து கூட்டணிக்குள் இணைத்துள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கூட்டணியை விரட்ட வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.


