News October 27, 2025
அதிகாலையில் புயல்… கனமழை வெளுத்து வாங்கும்

நாளை(அக்.27) அதிகாலையில் மொன்தா புயல் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது, நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதனையொட்டி, நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாய் இருங்கள்!
Similar News
News February 8, 2026
பிச்சைக்காரர் கையில் ஆங்கில நாவல்.. SM-ஐ கலக்கிய PHOTO

கடந்த வாரம் பிச்சைக்காரர் ஒருவர் ஆங்கில நாவல் படிக்கும் போட்டோ SM-ல் பலரது கவனத்தை ஈர்த்தது. மும்பையில் சாலையோரம் கந்தல் ஆடையில் படுத்திருக்கும் அந்த நபர், ஒரு கையில் ஆங்கில நாவலும், மறு கையில் பீடியும் வைத்திருக்கிறார். SM-ல் பகிரப்பட்ட இந்த போட்டோ சில மணி நேரங்களிலேயே வைரலானதுடன் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகவும் மாறியது. வாசிப்பு ஆர்வத்தை சிலர் பாராட்ட, சிலர் அவருடைய ஏழ்மை நிலைக்கு வருந்தினர்.
News February 8, 2026
இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா?

இரவில் தயிர் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பொதுவாக இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, இது அஜீரணத்தை ஏற்படுத்தும். தயிர் கொழுப்பும் புரதமும் நிறைந்த ஓர் உணவு என்பதால் இரவில் அது ஜீரணிப்பது சற்றுக் கடினம். சுவாசக் குழாய்களில் அதிக சளி சேரும் என்பதால் ஆஸ்துமா, இருமல், சளி பிரச்னை உள்ளவர்களும் இரவில் தயிரைத் தவிர்ப்பது நல்லது.
News February 8, 2026
நள்ளிரவில் ரஜினியுடன் BIKE RIDE: நடிகை ராதிகா

பல ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் ரஜினியுடன் பைக்கில் ஊர் சுற்றியது குறித்து ராதிகா மனம் திறந்து பேசியுள்ளார். இருவரும் பைக்கில் சென்றபோது, லதா ரஜினியின் சகோதரரான ரவி(அனிருத்தின் தந்தை) காரில் வந்து வழிமறித்ததாகவும், ரஜினி யாரோ ஒரு பெண்ணுடன் ரகசியமாக செல்கிறார் என தவறாக புரிந்து கொண்டதாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் லதா ரஜினிக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


