News April 17, 2024

மெரினாவில் உலவும் சுறா எச்சரிக்கை

image

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 13ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மணிமாறன் என்பவரின் காலை சுறா மீன் கடித்ததாகவும் அவர் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த அவர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News August 23, 2025

சென்னை: 10ஆம் வகுப்பு போதும்! அட்டகாசமான அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை கீழ் இயங்கும் அச்சு மையங்களில் காலியாக உள்ள Junior Electrician, Assistant Offset Machine Technician, Junior Mechanic உள்ளிட்ட 56 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு ஏற்ப ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் உள்ள <>படிவத்தை <<>>பூர்த்தி செய்து செப்.19குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News August 23, 2025

உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்சம் நிதியுதவி

image

சென்னை, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி துப்புரவுப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இதனை கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

News August 23, 2025

சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னையில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சோழிங்கநல்லூரில் 98.5 மி.மீ, புரசைவாக்கத்தில் 77.6 மி.மீ, அம்பத்தூரில் 58 மி.மீ, தண்டையார்பேட்டையில் 46 மி.மீ, மாம்பலத்தில் 41.2 மி.மீ மற்றும் பெரம்பூரில் 40.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!