News October 20, 2025
BREAKING: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 14,420 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், விநாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வரத்து இருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News October 20, 2025
அரிதிலும் அரிதான பறவைகள்.. நீங்க பார்த்திருக்கீங்களா?

உயிரியல் பூங்காக்களில் சில அரிய வகை பறவைகளை பார்க்கும் போது, இப்படியெல்லாம் உயிரினங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படுவோம். அது போல, சில வியக்கத்தக்க மற்றும் தனித்துவமான பறவைகளின் புகைப்படங்களை இங்கு பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த பறவையை குறிப்பிட்டு, தமிழில் அழகான பெயர் சூட்டுங்கள்..
News October 20, 2025
பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக EX-MP

இந்து அல்லாதவரின் வீட்டுக்கு செல்லும் இந்து பெண்களின் கால்களை உடைக்க வேண்டும் என பாஜக EX-MP பிரக்யா தாக்கூர் சர்ச்சையாக பேசியுள்ளார். பெண் குழந்தை பிறந்தால் வீட்டிற்கு லட்சுமி வந்திருப்பதாக கருதுகிறோம், ஆனால் அவர் எதிர்காலத்தில் வேறு மதத்தவரின் மனைவியாகிவிடுகிறார் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், பெற்றோரின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடும் பெண்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 20, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000 டெபாசிட்… வந்தது அப்டேட்

PM கிசான் உதவித்தொகையின் 21-வது தவணையான ₹2,000, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் பணம் கிரெடிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.