News October 20, 2025
லட்சுமி குபேர பூஜைக்கான பலன்களும்.. உகந்த நேரமும்

லட்சுமி குபேர பூஜை என்பது லட்சுமி தேவியையும், குபேரரையும் வேண்டி செய்யும் வழிபாடாகும். தீபாவளியில் இதனை செய்வதால் சங்கடங்களும், காரியத்தடைகளும் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் செல்வம் பெருகும். மாலை 3:45 முதல் இரவு 7 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம். தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ – விஷ்ணு கோவில்களில், லட்சுமி தேவியை தரிசிக்கலாம்.
Similar News
News October 20, 2025
மழைக்கு கடந்த 18 நாள்களில் 20 பேர் பலியான சோகம்

மழையால் கடந்த 18 நாள்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக TN அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்.1 – 18-ம் தேதி வரை கடலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 பெண்கள், 8 ஆண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளனர். மழையால் 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
News October 20, 2025
அதர்மத்தை நீக்கி, தர்மத்தை கடைபிடிப்போம்: CPR

தீபாவளி நாளில் அதர்மத்தை நீக்கி, தர்மத்தை கடைபிடிப்போம் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது தீபாவளி வாழ்த்தில், பின்தங்கிய பிரிவினருக்கு நமது ஆதரவை நீட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்படும் தீபங்கள் இரவை கூட்டாக ஒளிர செய்வது போல், நமது அர்ப்பணிப்பும் உறுதியும் பாரதத்தின் கூட்டு வளர்ச்சிக்கு வழிகாட்டட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
News October 20, 2025
தலை தீபாவளியா உங்களுக்கு? இதை செஞ்சிடாதீங்க!

தீபாவளி என்றாலே பெரும்பாலான இடங்களில் அசைவமும், ஆட்டுக்கால் பாயாவும் தான். ஆனால் தலை தீபாவளியை கொண்டாடும் தம்பதிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என புராணங்கள் சொல்லுது. இதனை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவு, பட்டாசுகள் வெடித்து உங்கள் தலை தீபாவளியை கொண்டாடுவது சிறப்பானதாக அமையுமாம். உங்கள் தலை தீபாவளி அனுபவத்தை கமெண்ட்ல SHARE பண்ணுங்க.