News October 20, 2025
சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள் இதுதான்

சிறுநீரக நோய்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறுநீரக நோய்கள் “அமைதியான கொலையாளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரகம் செயலிழந்தால் சருமத்தில் வறட்சி, தொடர்ச்சியான அரிப்பு, சிவப்பு தடிப்புகள் அல்லது தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
Similar News
News October 20, 2025
MH-ல் 96 லட்சம் போலி வாக்காளர்கள்: ராஜ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு 96 லட்சம் போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ராஜ் தாக்கரே ECI மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த போலி வாக்காளர்களை நீக்கும் வரை, தேர்தலை நடத்தக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை (SIR) காங்., கடுமையாக எதிர்த்தது. திமுகவும், தமிழகத்தில் SIR-ஐ மேற்கொள்ளக்கூடாது என கூறி வருகிறது.
News October 20, 2025
லடாக் போராட்டக்குழுவுடன் 22-ம் தேதி பேச்சுவார்த்தை

லடாக்கை தனி மாநிலமாக அங்கீகரிக்க கோரி ஜனநாயக கூட்டணி, லே அபெக்ஸ் பாடி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலியாகினர். இந்நிலையில், மத்திய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுக்களுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்றுக்கொண்ட நிலையில், வரும் 22-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
News October 20, 2025
2 நாள்களில் தங்கம் விலை ₹2,240 குறைந்தது

அக். மாதம் பிறந்தது முதலே உயர்ந்து வந்த தங்கம் தற்போது சரிந்து வருகிறது. தீபாவளி பரிசாக <<18055434>>இன்று<<>> சவரனுக்கு ₹640 குறைந்தது. கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,240 குறைந்துள்ளது. <<18055337>>இந்தியப் பங்குச்சந்தைகள்<<>> உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் அங்கு திரும்பியதே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ தங்கம் விலை குறைந்தால் சரி என நடுத்தர மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.