News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
Similar News
News October 20, 2025
இந்தியாவுக்கு சோகமான தீபாவளி..

இந்த ஆண்டு தீபாவளி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமான ஆண்டாக மாறிவிட்டது. ஆஸி., அணிக்கு எதிரான முதல் ODI-யில் இந்திய ஆடவர் அணி படுதோல்வி அடைந்தது. 7 மாதங்களுக்கு பிறகு, Ro- Ko-வின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் அவர்கள் சொதப்பியதால், கவலையில் ஆழ்ந்தனர். அதேபோல, WWC தொடரிலும் இந்திய பெண்கள் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது மேலும் ரசிகர்களின் மனதை நொறுக்கியது.
News October 20, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று முன்தினம் 1 அவுன்ஸ்(28g) 44 USD குறைந்திருந்த நிலையில், இன்று(அக்.20) 63 USD உயர்ந்துள்ளது. இதனால், தற்போது, 4,262 டாலராக விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் 1 அவுன்ஸ் தங்கம் ₹5,538 அதிகரித்துள்ளது. ஒருவேளை பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கினால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பும். இதனால், நம்மூரில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
News October 20, 2025
தலைநகரை திக்குமுக்காட வைக்கும் காற்று மாசு

தலைநகரில் 7 ஆண்டுக்கு பின் இப்போது தான் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள், நேற்று காசு மாசு அதிகரித்து, தரக்குறியீட்டில் 400 புள்ளிகள் சென்றுள்ளது. இந்த அளவு 50-க்கு குறைவாக இருந்தால் தான் சுத்தமான காற்று. 100-க்கு மேல் சென்றால் மோசமானது என்று அர்த்தம். டெல்லியில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 12 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்று பதிவாகியுள்ளது.