News October 19, 2025
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

இப்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை, பின்னர் 30 முதல் 35% வரை குறையும் என்கிறார் முதலீட்டு நிபுணர் அமித் கோயல். வரலாற்றில் 2 முறை மட்டுமே தங்கம் விலை இம்மாதிரி உச்சம் தொட்டதாகவும். அதன்பின் பெரும் சரிவு கண்டதாகவும் கூறும் அவர், இம்முறையும் உச்சம் தொட்டு, பின் 1 சவரன் ₹62,161 வரையும், வெள்ளி 1 கிலோ ₹77,450 வரையும் குறையும் எனக் கணித்துள்ளார். ஆகவே தங்கம் வாங்க அவசரப்பட வேண்டாம் என்கிறார்.
Similar News
News October 20, 2025
பிஹாரில் 24-ம் தேதி பரப்புரையை தொடங்கும் மோடி

பிஹார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை PM மோடி வரும் 24-ம் தேதி தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
News October 20, 2025
வரலாற்றில் இன்று

*1963 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பிறந்தநாள்.
*1974 – பாடலாசிரியர் பா.விஜய் பிறந்தநாள்.
*1978 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தநாள் .
*1991 – உத்தரகாசியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2008 – தமிழ திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் நினைவுநாள்.
News October 20, 2025
நடிகர் அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘எல்லம்மா’ படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறாராம். பல்வேறு முன்னணி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், நடிக்க ஆசையிருப்பதை சில பேட்டிகளில் தேவி ஸ்ரீபிரசாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.