News October 20, 2025
நடிகர் அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘எல்லம்மா’ படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறாராம். பல்வேறு முன்னணி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், நடிக்க ஆசையிருப்பதை சில பேட்டிகளில் தேவி ஸ்ரீபிரசாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Similar News
News December 9, 2025
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் இன்று முதல் டிச.14 வரை 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இதற்கான கோப்பையை DCM உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியா, ஜப்பான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் அனாஹத் சிங், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
News December 9, 2025
குக் வித் கோமாளி பிரபலத்தை மணக்கிறாரா பிக்பாஸ் ஜூலி?

ஜூலிக்கு கடந்த வாரம் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது தொடர்பான போட்டோக்களை அவர் வெளியிட, எதிலுமே மாப்பிள்ளையின் முகம் இல்லை. எனவே, யார் அவர் என அனைவரும் தேடத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அவர் பெயர் முகமது இக்ரீம் எனவும், குக் வித் கோமாளி, ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சிகளில் ஷோ ஏற்பாட்டாளராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி Official தகவல் வரவில்லை.


