News October 19, 2025
1 மாதம் இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை 1 மாதம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ரீசார்ஜ் பிளான்களை VI அறிமுகப்படுத்தியுள்ளது. ₹379-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்கள் வேலிடிட்டியுடன் Unlimited calls, தினமும் 100 SMS, தினமும் 2GB உடன் ஒரு மாதம் ஹாட் ஸ்டார் சேவையை இலவசமாக பெறலாம். மேலும், Unlimited 5G சேவையை பயன்படுத்தலாம். அதேபோல், ₹419 பிளானிலும் 1 மாதம் ஹாட் ஸ்டார் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. SHARE IT.
Similar News
News March 28, 2026
மீன்பிடி தடைக்கால நிதி ₹12,000 உயர்த்தப்படும்: டிடிவி

தமிழகத்தின் நிர்வாக வசதிகளுக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என TTV வாக்குறுதி அளித்துள்ளார். *மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ₹8000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும் * மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ₹2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் * சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். TNElection2026
News March 28, 2026
சீமானுக்கு சவாலாக மாறும் தேர்போகி பாண்டி

காரைக்குடியில் சீமானுக்கு எதிராக அமமுகவின் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். 2021-ல் காரைக்குடியில் அமமுக சார்பில் தனித்து போட்டியிட்ட தேர்போகி பாண்டி 44,864 வாக்குகளை பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் சா.மாங்குடி 75,954, அதிமுக கூட்டணி வேட்பாளர் எச்.ராஜா 54,365 வாங்கினர். தற்போது அதிமுக – அமமுக கூட்டணி அமைத்துள்ளதால், அத்தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல் வெளியானது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தே வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $110 (இந்திய மதிப்பில் ₹10,435) உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவிலும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அடுத்த வாரமும் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே நீடிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்ப்பின் போர் நிறுத்த நீட்டிப்பும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.


