News October 19, 2025

தீபாவளி குறித்து அகிலேஷ் யாதவ் சர்ச்சை கருத்து

image

கிறிஸ்துமஸின் போது உலகின் பல நகரங்கள் மின்விளக்குகளால் ஒளிர்கின்றன, ஆனால் தீபாவளியன்று நாம் ஏன் அகல் விளக்குகளுக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்ற அகிலேஷ் யாதவ்வின் கேள்வி சர்ச்சையானது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பன்சால், வாடிகனில் சென்று அகிலேஷ் கிறிஸ்துமஸை கொண்டாடட்டும், அங்காவது அவருக்கு 2-4 வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று சாடியுள்ளார்.

Similar News

News October 20, 2025

₹13,000 கோடியை அரசு செலவு செய்யவில்லை: தமிழிசை

image

தனிக்கை அறிக்கையின்படி மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ஏறக்குறைய ₹13,000 கோடியை தமிழக அரசு செலவு செய்யவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு வந்த உடன் எல்லோரும் சுத்தமாகி விடுவார்களா என திமுக கேட்கிறது என குறிப்பிட்ட அவர், எந்த வாஷிங்மெஷினில் போட்டு செந்தில்பாலாஜியை எடுத்தீர்கள் என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு போட்டதே திமுகதான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

News October 20, 2025

பட்டாசு வெடிக்கும்போது கண்களை காப்பது எப்படி?

image

*பட்டாசு துகள் பட்டால் உடனே கண்களை தேய்க்கக் கூடாது. குளிர்ந்த நீரால் கண்களை கழுவுங்கள். இதனால் கண்ணுக்குள் விழுந்த மத்தாப்பு துகள், பட்டாசு துகள்கள் வெளியேறிவிடும். *பாதுகாப்புக்காக கண்ணாடி அணிந்து பட்டாசு வெடிக்கலாம். *குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளியில் நின்றபடி வெடிக்கலாம். *வெடிகளை கையில் கொளுத்தி விளையாடுவதை தவிர்த்தால், கண்களை காக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News October 20, 2025

விஷாலின் முதல் சம்பளம் இதுதான்

image

ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கி வரும் விஷால், முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இந்நிலையில், தான் முதலில் அர்ஜுனிடம் பெற்ற சம்பளம் ₹100 என பேட்டி ஒன்றில் விஷால் பகிர்ந்துள்ளார். முதன்முதலில் தன்னை ஹீரோவாக பார்த்தவர் அர்ஜுன் தான் என்றும், அதன் பின்னரே செல்லமே வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் இளம் ஹீரோக்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!