News October 20, 2025

விஷாலின் முதல் சம்பளம் இதுதான்

image

ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கி வரும் விஷால், முதலில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இந்நிலையில், தான் முதலில் அர்ஜுனிடம் பெற்ற சம்பளம் ₹100 என பேட்டி ஒன்றில் விஷால் பகிர்ந்துள்ளார். முதன்முதலில் தன்னை ஹீரோவாக பார்த்தவர் அர்ஜுன் தான் என்றும், அதன் பின்னரே செல்லமே வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் இளம் ஹீரோக்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

Similar News

News December 14, 2025

ரஷ்யா-உக்ரைன் போரில் உச்சக்கட்ட பதற்றம்!

image

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவில், 450-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது. ஒடேசா துறைமுகம் மீது மிக சக்திவாய்ந்த கின்சல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா இந்த ஏவுகணையை பயன்படுத்துவது முதல்முறை என்பதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News December 14, 2025

தொடரும் காதல் பயணம்.. ரோஹித் சர்மா (PHOTOS)

image

10-வது திருமண நாளை கொண்டாடும் ரோஹித் சர்மா – ரித்திகா நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இந்நிலையில், என் வாழ்வின் சிறந்த அத்தியாயம், காதல், நேசம் எனது துணைவி என்று தனது மனைவியுடனான அன்பை தனது இன்ஸ்டாவில் ரோஹித் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள திருமணநாள் கொண்டாட்டம், அழகிய வாழ்க்கை பயணம் குறித்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. அதை மேலே SWIPE செய்து பாருங்க.

News December 14, 2025

BREAKING: நல்லகண்ணு ஹாஸ்பிடலில் அனுமதி

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100) சென்னை ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை முன்னேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், இரவு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மிக மோசமான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!