News October 19, 2025

இந்தியில் வாழ்த்து சொன்ன சேகர்பாபு

image

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Similar News

News October 19, 2025

குழந்தைகளுக்கு இந்த வயதில் காது குத்துறீங்களா? உஷார்!

image

குழந்தை பிறந்து குறைந்தது 1 வருடம் கடந்த பிறகுதான் அவர்களுக்கு காது குத்த வேண்டும். இல்லையெனில், புண், தொற்று ஏற்படுவதில் இருந்து நரம்புகள் கூட பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அத்துடன், காது குத்தும்போது குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் கூட காது குத்த வேண்டாம். காது குத்தி 6 வாரங்கள் ஆகும் வரை வேறு காதணியை மாற்ற வேண்டாம். பல குழந்தைகளை காக்க SHARE THIS.

News October 19, 2025

கேரக்டர் ரோல்களில் கலக்கும் சரத்குமார்..!

image

1980, 90-களில் கிராமத்து நாயகனாக அறியப்பட்டவர் சரத்குமார். ஆனால், அவரது சினிமா வாழ்க்கை 2000-க்கு பிறகு சரிந்தது. அரசியலில் நுழைந்த அவர், கட்சியையும் பாஜகவில் இணைத்துவிட்டார். இந்நிலையில், PS, போர்தொழில், 3BHK, டியூட் ஆகிய படங்களில் வித்தியாசமான ரோல்களில் கலக்கி வருகிறார். இதனால் சரத்குமார், சினிமாவில் 2.0-வை துவக்கிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு பிடித்த சரத்குமார் படம் எது?

News October 19, 2025

இன்று இரவு 12 மணிக்கு தயாரா இருங்க..

image

தித்திக்கும் தீபாவளி திருநாள் இன்னும் சில மணி நேரங்களில் கொண்டாடப்படவுள்ளது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து, இனிப்புகளை பகிர்ந்துண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர். வானில் வர்ண ஜாலங்களை நிகழ்த்த வானவெடிகளை தயார் நிலையில் வைத்திருங்கள். உங்கள் அன்பானவர்களுடன் இந்த தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாட தயாராகுங்கள். தீபாவளி வாழ்த்துகளை புன்சிரிப்போடு கூறுங்கள்.

error: Content is protected !!