News October 19, 2025

இந்தியில் வாழ்த்து சொன்ன சேகர்பாபு

image

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Similar News

News December 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 547 ▶குறள்: இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

News December 12, 2025

நானாவது கொஞ்ச நேரம் நின்றிருக்க வேண்டும்: SKY

image

எப்போதும் அபிஷேக் சர்மாவை நம்பி இருக்க முடியாது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். SA உடனான 2-அவது டி20 தோல்விக்கு பின்னர் பேசிய அவர் தானும், கில்லும் ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், நானாவது கொஞ்ச நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த தோல்வி ஒரு பாடமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

‘வா வாத்தியார்’ இன்று ரிலீசாகாது

image

‘வா வாத்தியார்’ படம் இன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், பிரச்னையை சரிசெய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறோம், விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடன் பாக்கியை திருப்பி செலுத்தும் வரை <<18527361>>இப்படத்தை<<>> ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்தது.

error: Content is protected !!