News October 19, 2025
தீபாவளி.. எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

ஐப்பசி மாத அமாவாசையில் கொண்டாடப்படும் தீபாவளி என்றாலே எண்ணெய் குளியலும், பூஜையும் தான். அப்படி நாளை எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதிகாலை 4 மணி- 6 மணிக்குள் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பூஜை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.
Similar News
News October 19, 2025
பண மழை கொட்டும் 5 ராசிகள்

குரு பகவன் அதிசார நிலையில், நேற்று (அக்.18) கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால், 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: நிதி ஆதாயம் பெருகும். *சிம்மம்: வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். *கன்னி: தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியடையலாம். *துலாம்: வேலையில் சம்பள உயர்வு, வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். *விருச்சிகம்: நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
News October 19, 2025
எங்க இருந்தீங்க இவ்ளோ நாளா?

‘இதுதான்யா உண்மையான சொர்க்கம்’ என்று சென்னைவாசிகள் சொந்த ஊர் காற்றை தற்போது சுவாசித்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, கடந்த 3 நாள்களில் மட்டும் 9.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்களிலும், 6.15 லட்சம் பேர் அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களில் 2 லட்சம் வரையிலும், சொந்த வாகனங்களில் 1.5 லட்சம் பேர் என மொத்தம் 19.15 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதை கேட்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
News October 19, 2025
சென்னையில் ஓடும் காரில் நடிகைக்கு பாலியல் தொல்லை

புனேவை சேர்ந்த துணை நடிகை ஆஸ்தா, DUDE பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகாரளித்துள்ளார். அக்.11 அன்று நிகழ்ச்சிக்கு காரில் சென்றபோது, டிரைவர் கணேஷ் பாண்டியன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை ஆஸ்தா அளித்த புகாரின்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், கார் டிரைவர் கணேஷ் பாண்டியன் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.